×

விசாரணை நடத்துவதற்கான முகாந்திரமே இல்லை 69% இடஒதுக்கீட்டை எதிர்த்த மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை,’ என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அது தொடர்பான இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. சென்னையை சேந்த தினேஷ் என்ற மாணவர், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட பல விவகாரங்களில் இதர பிரிவினருக்கு (ஓசி) இடம் கிடைக்கவில்லை. அதனால், தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரினார்.

இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீடு முறைகளில் மத்திய அரசு தலையிடாது. அதில், மத்திய அரசுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது,’ என்று கூறி விட்டது. இந்த வழக்கில் தமிழக அரசும் கடந்த வாரம் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுத்த பின்னர்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, பின் தங்கிய சமூகத்தினரை முன்னேற்ற வேண்டும் எனபதற்காக தான் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதனால், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டது.

இந்த வழக்கு கடந்த தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அது குறித்து உச்ச நீதிமன்றமும் முன்னதாக தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வாரம் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த  மனு, இதே போன்ற கோரிக்கையை கொண்ட மராத்தா இடஒதுக்கீடு வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படும்,’ என நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில், நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று இந்த  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், மீனாட்சி அரோரா ஆகியோர் வாதிட்டனர்.

அதில் அவர்கள், “தமிழகத்தில் இடஒதுக்கீடு 50 சதவீதமாகதான் இருக்க வேண்டும். இது, நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால்தான் தற்போது வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் இது தொடர்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கமிட்டியும் அமைக்கப்பட்டது. எனவே, மராத்தா வழக்கோடு இணைத்து, இந்த வழக்கையும் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும்,’’ என்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சேகர் நாப்டே ஆகியோர், “மராத்தா வழக்கோடு தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை ஒரு துளியும் ஒப்பிட முடியாது. ஏனெனில், அது அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணைப்படி சட்டப் பாதுகாப்பு பெற்றது. அதனால், 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை,’’ என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான முகாந்திரமும் கிடையாது. மேலும், இந்த வழக்கை மராத்தா இடஒதுக்கீடு வழக்கோடு இணைத்து அரசியல் சாசன அமர்விலும் விசாரிக்க வேண்டாம். ஏனெனில், இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், மராத்தா இடஒதுக்கீடு குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முழுமையாக விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,’’ என்றனர். தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , No dismissal of petition against 69% reservation: Supreme Court orders action
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...