×

சொன்னாரே! செஞ்சாரா?... கமிஷனுக்காக நல்லா இருந்த ரோடுகள திரும்ப போட்டது தான் எம்எல்ஏவோட சாதனை: அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை(தனி) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அறந்தாங்கி தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த ரத்தினசபாபதி இருக்கிறார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியிட்டார். சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ரத்தினசபாபதி, அறந்தாங்கி தொகுதியை பற்றி முழுமையாக அறிந்துள்ளதால் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக  வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. மீனவர்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சிட்டிங் எம்எல்ஏ ரத்தினசபாபதி, மீனவர்களுக்கு குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளம் தூர் வாராப்படாமல் அப்படியே அம்போவென நிற்கிறது. மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மூடுவிழா, அறந்தாங்கி பகுதியில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தம், நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பேருந்து நிலையம், மணமேல்குடி கோடியக்கரை சுற்றுலா மேம்பாட்டு பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் அப்படியே முடங்கியுள்ளன. அறந்தாங்கி தொகுதியில் கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களை முடக்கியது மட்டும்தான் அதிமுக அரசின் சாதனையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பனிமனையை அதிமுக அரசு மூடியுள்ளது.  

மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு முடக்கியபோது, அதை தடுக்க சிட்டிங் எம்எல்ஏ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை முறையாக பராமரிக்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகள் அனைத்தும் லாயக்கற்ற நிலையில் உள்ளன. ஆனால் கமிஷனுக்காக நல்லா இருக்கும் சாலைகளை திரும்ப திரும்ப போட்டு வந்தது தான் 5 ஆண்டு சாதனை என தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.

திட்டங்கள் முடக்கப்பட்டதால் சிரமத்திற்குள்ளான மக்கள்
மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் சக்தி.ராமசாமி கூறும்போது, ‘சட்டமன்ற தேர்தலின்போது ஆளுங்கட்சி எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அதிமுக அரசே அவருக்காகவே அறந்தாங்கி தொகுதியை முற்றிலும் புறக்கணித்துவிட்டது. திருச்செந்தூரில் இருந்து அறந்தாங்கி வந்த அரசு பேருந்து, அறந்தாங்கியில்  இருந்து வேலூர் சென்ற அரசு பேருந்து, அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி  வழியாக ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மணமேல்குடி கோடியக்கரையில் பல கோடி  ரூபாய் மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு  கொண்டு வரப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளன. சிட்டிங்  எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதது ஒருபுறம்  இருக்க, சொல்லாத வாக்குறுதிகளாக பல திட்டங்களை முடக்கி தொகுதி மக்களை  சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளார்’ என்றார்.

5 ஆண்டுகளில் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்
எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறும்போது, தேர்தல் வாக்குறுதிப்படி தொகுதி மக்களுக்காக அறந்தாங்கியில் ஆர்.டி.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளாண்மை விரிவாக்க மையம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு நிதி பெற்று கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

சாலை மேம்பாட்டு பணி, குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீன்பிடி இறங்கு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் தெற்கு வெள்ளாற்றில் வரும் தண்ணீரால் அறந்தாங்கி தொகுதியில் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி, அறந்தாங்கி தொகுதிக்கு தேவையான எண்ணற்ற பல திட்டங்களை 5 ஆண்டுகளில் பெற்று கொடுத்துள்ளேன்’ என்றார்.

2016 அறந்தாங்கி
சட்டமன்ற தேர்தல் டேட்டா
மொத்த வாக்காளர்கள்        2,14,394                            
பதிவான வாக்குகள்        1,54,597                            
ரத்தினசபாபதி (அதிமுக)        69,905
ராமச்சந்திரன் (திமுக கூட்டணி)    67,614                     
குலாம்முகமது (எஸ்டிபிஐ)    1,741              
அருள்ஜஸ்டின்திரவியம் (தமமுக)    1,176                            
சகிலாபானு(நாம்தமிழர்)        835                                                                             
நோட்டா            775
2019 நாடாளுமன்ற தேர்தல் டேட்டா
(அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி)
மொத்த வாக்குகாளர்கள்        2,14,410                                   
பதிவான வாக்குகள்        1,53,435                                          
நவாஸ்கனி (திமுக கூட்டணி)    79,337                     
நயினார் நாகேந்திரன் (பாஜ)    35,675
புவனேஸ்வரி (நாம் தமிழர்)    7,206              
விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்)    1,496
பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்)    441                     
நோட்டா            1,133

Tags : MLA ,Rathinasapathi ,Rathinasapati , You said it! Cencara? ... well it was for the Commission to put back rotukala emelevota record: MLA Aranthangi Rattinacapapati
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...