×

தமிழகம், புதுவையில் காங். வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு: சோனியா நியமித்தார்

புதுடெல்லி: தமிழகம், புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய, 9 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார். தமிழகம், புதுவையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது கட்சி சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, மூத்த தலைவர் திக் விஜய் சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நியமித்தார்.

இதன் உறுப்பினர்களாக பிரான்சிஸ்கோ சர்தின்கா, கொடிக்குன்னில் சுரேஷ், தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தமிழகத்துக்காகவும், புதுவைக்காக ஏ.வி.சுப்ரமணியம், வி.வி.நாராயணசாமி உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இக்குழு விரைவில் இந்த மாநிலங்களுக்கு சென்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் என தெரிகிறது.

Tags : Tamil Nadu ,New Delhi Cong. Committee ,Sonia , Tamil Nadu, New Delhi Cong. Committee to select candidates: Appointed by Sonia
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...