×

பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு

ஈரோடு: பவானியில் புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலில் கருவறைக்குள் பக்தர்களே சென்று அம்மனுக்கு புனித நீர், பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 16ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்களே கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீர் மற்றும் பாலபிஷேகம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு முதல் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தி பெருக்குடன் வழிபட்டனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற புனித நீரில் மஞ்சள், திருநீர், தானியங்களை கலந்து அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வாக விளங்கும் சேறுபூசும் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடல்களில் சேற்றை பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். திருவிழாவின் காரணாமாக பவானி நகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chellyandi Amman temple festival ,Bhavani ,Amman , Bhavani, Celliandi Amman
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்