×

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்..! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் எனவும் கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று முதல் 05.03.2021 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தின் மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,T.N. Meteorological Center , Dry weather in Tamil Nadu and Pondicherry till March 5 ..! Meteorological Center Information
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...