அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும்: ஜி.கே.வாசன் எம்பி நம்பிக்கை

தூத்துக்குடி: தமிழக சட்டமன்றத்தில் தமாகாவின் குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி நேற்று தூத்துக்குடியில் அளித்த பேட்டி :தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறேன். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா தொடர்கிறது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்து அதிமுகவுடன் பேசி  முடிவு செய்யப்படும். அனைத்து மண்டலங்களிலும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் இடங்கள் பெற முயற்சி மேற்கொள்ளப்படும். வரும் சட்டமன்றத்தில் தமாகா பிரதிநிதிகளின் குரல் நிச்சயம் ஒலிக்கும். சமக தலைவர் சரத்குமார் நல்ல நண்பர். ஒரு கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும்.  ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் பாஜவை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால் தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது என்று பதிவு செய்து வருகிறார். இதனை மக்கள் ஏற்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>