இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நீரவ் மோடிக்கு ஒரு பாய், தலையணை: மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார்நிலை

மும்பை: இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தி கொண்டு வரப்பட உள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை அடைக்க, மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ..13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சிபிஐ, அமலாக்கத் துறை எடுத்த முயற்சியின் விளைவாக,  இந்தியாவுக்கு அவரை நாடு கடத்தலாம் என நேற்று முன்தினம் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், அவரை அடைப்பதற்காக மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறை தயாராகி வருகிறது. இங்குள்ள 12ம் பராக்கில் உள்ள 3 செல்களில், ஒரு சிறப்பு செல்லில் பலத்த பாதுகாப்புடன் அவர் அடைக்கப்பட உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு சமர்பித்துள்ள கடிதத்தில், நீரவ் மோடி அடைக்கப்பட உள்ள சிறையில் என்ன வசதிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நீரவ் மோடி அடைக்கப்படும் சிறை பிரிவில் சில கைதிகள் மட்டுமே இருப்பார்கள்.  அவருக்கு ஒரு பாய், பருத்தி பஞ்சு தலையணை, பெட்ஷீட், கம்பளி போன்றவை வழங்கப்படும்.

* சிறையில் அவர் நடை பயிற்சி செய்யலாம்.

*  உடைமைகளை வைப்பதற்கான இடமும் ஒதுக்கப்படும்.

* சிறையில் காற்றோட்டம் இருக்கும்.

Related Stories: