அதிமுக கொடி, பொதுச்செயலாளர் பதவியுடன் சசிகலா பரபரப்பு அறிக்கை.. அதிமுகவினர் ஷாக்...

சென்னை : ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தொடர்பாக அதிமுக கொடியுடன் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகர் இல்லத்தில், அவரது திருவுருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை வந்ததில் இருந்து மௌனம் காத்துக் கொண்டிருந்த அவர், உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என அதிரடியாக பேசினார்.

இந்த நிலையில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அச்சமயம் அதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித்தலைவியின் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முகவரியில் கழகப் பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: