×

பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறு

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு பாஜக வினர் கூறிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி ஆதாரத்துடன் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை என்ற இடத்தில் பார்வதி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த பகுதியிலேயே அவருக்கு 3 கிளைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலத்தில் பாஜக இளைஞர் அணி மாநாடு நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பாஜகவினர் நகங்களில் அவ்வழியாக சென்றனர். அப்போது புதன்சந்தையில் நகங்களை நிறுத்தி ரூ. 5,000 பார்வதி ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் பணத்தை கொடுக்காமல் ஒவ்வொருவராக புறப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் அவர்களை மறித்து சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால் பாஜகவினர் பணம் கொடுக்காமல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பணம் வேண்டுமென்றால் தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கடை ஊழியர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் செய்வது அறியாத திகைத்த கடை உரிமையாளர் பார்வதி முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பார்வதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில்  வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Salem ,Bhājaka convention , Shop owner complains to police with CCTV evidence: People who went to Salem for BJP convention ate at Namakkal and came to Tanjore to get money
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...