×

திருப்புத்தூர் அருகே புரவி எடுப்பு விழா கோலாகலம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் வடக்குத்தெரு கரியமலை சாத்தய்யனார் மற்றும் இராவுத்தராயர் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று நடைபெற்றது.திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் வடக்குத்தெரு கரியமலை சாத்தய்யனார் மற்றும் இராவுத்தராயர் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கடந்த பிப்.13ம் தேதி மாலை சேங்காய் வெட்டுதல் நடந்தது.

பிப்.20ம் தேதி மாலை கொடி வளைதலும், தொடர்ந்து சாமி அழைத்தலும், இரவு குதிரை காட்டலும் நடந்தது. தொடர்ந்து விநாயக பானை வைத்தலும் நடந்தது. பிப்.21ம் தேதி நேற்று காலை 8 மணியவில் நாச்சியார் காளை கட்டலும், 9 மணியளவில் இரண்டு பெரிய மற்றும் இரண்டு சிறிய அரண்மனைக் குதிரைகளும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகளையும், சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் மதளைகளையும் தலையில் சுமந்துகொண்டு மேளதாளத்துடன் வாணவேடிக்கைகளுடன் சுமார் இரண்டு கி.மீ. தூரம் உள்ள இராவுத்தராயர் கோயில் வரை சென்று இறக்கி வைத்தனர். பின்னர் இராவுத்தராயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர், நைனார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


Tags : Kuala Kalam ,Provivi Dedication Festival ,Tiruputtur , Thiruputhur: Pattamangalam North Street near Thiruputhur Kariyamalai Satyayanar and Rautharaiyar Temple Archaeological Ceremony yesterday
× RELATED வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு தீவிரம்