ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு ஏற்பாடுகள்: அமைச்சர் பென்ஜமின் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தி.ப.கண்ணன் தலைமையில் வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட  நிர்வாகிகள் கா.சு.ஜனார்த்தனன், சி.ஒய்.ஜாவித்அகமத், காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, முன்னால் எம்.பி.ஜெகநாதன், க.வைத்தியநாதன், கே.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் செவ்வை எம்.சம்பத்குமார், முன்னால் எம்எல்ஏ ரா.மணிமாறன், கே.எஸ்.ரவிசந்திரன், புட்லூர் ஆர்.சந்திரசேகர், கேஜிடி.கௌதமன், எம்.மகேந்திரன், எ.தேவதாஸ், இம்மானுவேல், டி.எம்.ரமேஷ், எம்.பி.தென்றல் குமார், கே.ஒய்.மகேஷ், யு.ராகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் பேசியதாவது, “வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள், அன்னதானம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்” என்றார்.

விழாவின் முடிவில் ராஜா (எ) பேரழகன் நன்றி கூறினார்.

Related Stories:

More
>