×

அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் 10 டிப்பர் லாரிகள் கிராம மக்களால் சிறைபிடிப்பு..!!

அரியலூர்: அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் 10 டிப்பர் லாரிகள் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டன. விகைகாட்டி அருகே வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் 3 சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்பு சுரங்கங்கள் உள்ளன. சிமெண்ட் ஆலை ஊழியர் கார்த்திக் வீடு திரும்புகையில் டிப்பர் லாரி வேகமாக வந்ததால் பனை மரத்தில் மோதி உயிரிழந்தார். விபத்தில் பலியான கார்த்திக் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி அவரது உறவினர்கள் 10 டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர்.


Tags : Arialur cement plant , Ariyalur Cement Factory, 10 tipper lorries, villagers, jail
× RELATED சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை