×

பொதுநலன் வழக்கு தொடர்ந்ததால் பயங்கரம்: வக்கீல் தம்பதி குத்திக்கொலை

திருமலை: தெலங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் சீலம் ரங்கய்யா. இவரை கடந்தாண்டு மே 26ம் தேதி ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக மந்தானி காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றனர். அப்ேபாது, அவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நாகமணி என்ற வக்கீல், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாகமணிக்கும், அவரது கணவரான வக்கீல் கட்டுவாமன் ராவுக்கும் போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. இ து பற்றி உயர் நீதிமன்றத்திலும் முறையிட்டு பாதுகாப்பு கேட்டனர்.

இந்நிலையில், நாகமணியும், கட்டுவாமன் ராவும் நேற்று முன்தினம் மாலை பெடப்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர்கள் திடீரென காரை வழி மறித்து, கத்தியால் 2 பேரையும் சரமாரியாக குத்தினர். இதில் நாகமணி இறந்தார். கட்டுவாமன் ராவ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் யாரும், அவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. போலீசார் கட்டுவாமன் ராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  ஆனால், வழியிலேயே அவரும் இறந்தார். இந்த சம்ப  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Tags : Terror ,Lawyer ,death , Terror as public interest litigation continues: Lawyer couple stabbed to death
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...