உபி. மாநிலம் உன்னாவில் மீண்டும் பரபரப்பு: வயலில் இறந்து கிடந்த 2 சிறுமிகள் சடலம் மீட்பு: மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை

உன்னாவ்: உத்தரப் பிரதேசத்தில் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 தலித் சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ்  மாவட்டத்தில் உள்ள பாபூரா கிராமத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுமிகள் வயலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றனர். மாலை வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் சிறுமிகளை தேடத் தொடங்கினார்கள். அப்போது வயலில் கட்டிப் போட்ட நிலையில் மூன்று சிறுமிகளும் மயங்கி கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  

உடனடியாக மூன்று பேரும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர்.அங்கு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் 2 சிறுமிகள் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து,  சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்களா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>