கூட்டணிக்கு வந்த ஒரே கட்சி உஷார் பண்ணிட்டாரு உலக நாயகரு

திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன், மக்களோடு மட்டும்தான் கூட்டணின்னு சொல்லிட்டு இருந்தாரு மக்கள் நீதி மய்யம் தலைவரு, உலக நாயகன் கமல்ஹாசன். ஆனாலும் மனசுக்குள்ள கூட்டணி வச்சுதான் ஆகணும்னு நினைச்சிட்டு இருந்தாராம். இதை கட்சி நிர்வாகிங்க சொல்றாங்க. அதே நேரம், நிர்வாகிகளோட பிரஷரும் கூட்டணி வைக்கணும்னுதான் இருந்துச்சாம். இதனால கூட்டணிக்காக கதவை திறந்து வச்சு கமல் காத்துக்கிட்டு இருந்தாராம். ஆனா, நினைச்ச மாதிரி யாருமே வரல. இதனால நொந்துப்போன கமலும் பார்ட்டி ஆளுங்களும் நம்மை தேடி வந்திருக்கிற அந்த டெல்லி கட்சியையாவது கெட்டியா பிடிச்சிக்கலாம்னு ஐடியா பண்ணிட்டாங்களாம். அது வேற எந்த கட்சியும் இல்ல, ஆம் ஆத்மிதான். கெஜ்ரிவாலோடு போனில் பேசிய உலக நாயகரு, கூட்டணியை கன்ஃபாம் பண்ணிட்டாராம். ரெண்டு நாளா அந்த கட்சி தமிழக நிர்வாகிகளோடு பேசிட்டு இருக்காராம். கூட்டணிக்கு வந்த ஒரே கட்சியையும் போகவிடக்கூடாதுன்னு மநீம நிர்வாகிகளும் உஷாரா இருக்காங்களாம்.

Related Stories: