×

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி அல்ல: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கபட்டுள்ளவர் சந்திரகுமார். இலங்கை தமிழரான இவர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை முகாமில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து சந்திரகுமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2016ல் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது. தற்கொலை முயற்சி குற்றத்திற்கான தண்டனை அதிகபட்சம் ஒரு ஆண்டு மட்டுமே. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. காலதாமதம் செய்வதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Tags : Chennai iCourt , Fasting is not a suicide attempt: Chennai iCourt order
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...