×

டெஸ்ட் போட்டிகளில் டு பிளெஸ்ஸி ஓய்வு

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டு பிளெஸ்ஸி (36 வயது), டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  2012ல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், கடைசியாக இந்த மாதம்  ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அந்த தொடரின் 4 இன்னிங்சில் முறையே 17, 5, 23, 10 ரன் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் 2-0 என தொடரை வென்று ஒயிட்வாஷ் செய்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2021, 2022ல் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரை இலக்காகக் கொண்டு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். டு பிளெஸ்ஸி இதுவரை 62 டெஸ்டில் 4163 ரன் குவித்துள்ளார் (சராசரி 40.02 ரன், அதிகம் 199, சதம் 10, அரை சதம் 21). இவர் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கடைசி 2 டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடக்க உள்ள கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தாகூருக்கு பதிலாக உமேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா:கோஹ்லி (கேப்டன்), ரோகித், மயாங்க், கில், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஹர்திக், பன்ட் (கீப்பர்), சாஹா (கீப்பர்), அஷ்வின், குல்தீப், அக்சர், வாஷிங்டன், இஷாந்த், பும்ரா, சிராஜ், உமேஷ்.

Tags : Plessis , Du Plessis retires from Test cricket
× RELATED டு பிளெஸ்ஸி 61, ரஜத் 50, கார்த்திக் 53*; ராயல் சேலஞ்சர்ஸ் 196 ரன் குவிப்பு