×

டச்சு கோட்டையில் இந்தியன் 2 ஷூட்டிங்: கமல்ஹாசன் பங்கேற்பு

சென்னை: செங்கல்பட்டில் உள்ள டச்சு கோட்டையில் இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் புகழ் வாய்ந்த டச்சு கோட்டை உள்ளது. இங்கு படப்பிடிப்பை நடத்த ஷங்கர் திட்டமிட்டார். படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வாலுக்கு மேக்அப் போட, ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். அதேபோல் சண்டை காட்சிகளுக்கும் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். டச்சு கோட்டையில் வயதான கமல்ஹாசன் சண்டை போடும் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த காட்சிகளை 2 தினங்களுக்கு முன் ஷங்கர் படமாக்கினார். இதன் தொடர்ச்சியை விரைவில் மீண்டும் படமாக்க இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்….

The post டச்சு கோட்டையில் இந்தியன் 2 ஷூட்டிங்: கமல்ஹாசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Indian 2 Shooting ,Dutch ,Castle ,Kamalhasan ,Chennai ,2 ,Dutch Fort ,Chengalpat ,Shankar ,Kamalhaasan ,2 Shooting ,
× RELATED மதுவுடன் சேர்த்து போதை காளான் தின்ற...