தேர்தல் முன்னேற்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!!

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்  15 நாட்களுக்கு ஒருமுறை தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறக்கூடிய இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமானது தொடர்ந்து தயார் செய்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்குமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையமானது உத்தரவிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாளை மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்களை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவிருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை அதிகரிக்கலாம் என்பது குறித்தான கருத்துக்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்கவிருக்கின்றனர்.

Related Stories:

>