×

உலகமெங்கும் 15 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் 200 பேருக்கு தலைமை பதவி; 60 பேர் அமைச்சர்களாக உள்ளனர்

வாஷிங்டன்:உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தலைமை பதவிகளில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் சென்ற இந்தியர்கள், அந்த நாட்டு மக்களுடன் ஒன்றாக இணைந்து அந்நாட்டை மேம்மையடைய செய்வதில் முக்கிய பங்காற்றி  வருகின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய தலைமைப் பதவிகளில் வகித்து  வருகின்றனர். இந்நிலையில், ‘இந்தியாஸ்போரா’ நிறுவனர் மற்றும் தொழிலதிபர் எம்.ஆர்.ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட உலகெங்கிலும் உள்ள 15  நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர்.

அவர்களில் 60 பேர் சம்பந்தப்பட்ட நாடுகளின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு நாட்டு அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய பிற தகவல்களின்  அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. உலகின் பழமையான ஜனநாயக நாட்டான அமெரிக்காவின் முதல் கறுப்பின துணை ஜனாதிபதியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கமலா ஹாரீஸ்  என்பது பெருமைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அமி பெரா கூறுகையில், ‘2021 இந்தியாஸ்போரா அரசுத் தலைவர்கள் பட்டியலில் இடம்  பெற்றது எனக்கு பெருமை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய எம்பி என்ற முறையிலும், இந்திய-அமெரிக்க சமூகத்தின் தலைவராக இருப்பதிலும் பெருமைப்படுகிறேன்.  இந்தியசமூகம் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது’ என்றார்.

Tags : countries ,Indian ,ministers ,world , இந்திய வம்சாவளியினர்
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...