வாலாஜா அரசு கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் சாதனை

வாலாஜா :  மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதேபோல் தேசிய அளவிலான டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நடைபெற்றது.

இதில் டென்னிஸ் போட்டியில் தமிழக அணியின் சார்பில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசுக்கல்லூரியை சேர்ந்த 8 மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் மாணவிகள் சிறப்பாக விளையாடி 3ம் இடம் பெற்று கோப்பைகளை வென்றனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் க.பரமேஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டினார்.

Related Stories:

>