உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த மேலும் 57 போலீசாரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த மேலும் 57 போலீசாரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி நிதியுதவி அறிவித்திருந்தார்.

சென்னை பெருநகரக் காவல், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பெ. சந்திரசேகரன்;

வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு. அழகர்சாமி;

இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. வ. இராஜேந்திரன்;

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கு. சிவகுமார்;

புனிததோமையர்மலை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. டி. ராஜாமணி;

ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பூ. ரவிந்திரன்;

துறைமுகக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. முரளிபாபு;

சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ச. கார்த்திகேயன்;

கோயம்புத்தூர் மாநகரம், காட்டூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. வில்லியம் பவுல் ராபர்ட்;

ஆயுதப்படையில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி ஸ்மைல்;

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எம். கே. ஞானமுத்து;

கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. திருமூர்த்தி;

வடவள்ளி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. சதீஷ்குமார்;

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ம. ரமணக்குமார்;

திண்டுக்கல் மாவட்டம், காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. தெ. மணிகண்டன்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. வி. பாஸ்கரன்;

காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எஸ். டேவிட்;

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. பிரபாகரன்;

மதுரை மாநகரம், ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. எல். ஜேசுராஜ்;

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. இரா. சிவசுப்பிரமணியன்;

நாமக்கல் மாவட்டம், நில அபகரிப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. நா. ராஜன்;

நீலகிரி மாவட்டக் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எம். ரவி;

தேவாலா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கே. ரவிச்சந்திரன்;

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. செ. மெய்யப்பன்;

சேலம் மாவட்டம், மல்லியக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. க. முருகன்;

தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மா. சந்திரன்;

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆர். சண்முகராஜ்;

தஞ்சாவூர் மாவட்டம், கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சோ. கஜேந்திரன்;

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. ஸ்ரீராம்;

தென்காசி மாவட்ட நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. நடராஜன்;

திருச்சிராப்பள்ளி மாநகரம், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ட்டி. முருகையன்;

திருச்சிராப்பள்ளி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எம். பிச்சைப்பிள்ளை;

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஐ. ஜெயசிங் சாமுவேல்;

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜி.டி. முத்துராமலிங்கம்;

திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. எஸ். கமலக்கண்ணன்;

வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. வி. பிச்சாண்டி;

திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எம். பழனி;

திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. எ. தயாளன்;

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. டி. வெங்கடேசன்;

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. அய்யம்பெருமாள்;

மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செ. சுதாகர்;

விருதுநகர் மாவட்டம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜி. சங்கரநாராயணன்;

தமிழ்நாடு சிறப்பு காவல் படை (திருச்சிராப்பள்ளி) முதலாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. மணிகண்டன்; உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. இரா. முரளிதரன்;

(கோயம்புத்தூர்) 4 ஆம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மா. முத்துராம்குமார் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமாகினர்.

சென்னை பெருநகரக் காவல், புனிததோமையர்மலை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. பி. நல்லுசாமி;

அரசு அருங்காட்சியக புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. புஷ்பநாதன்;

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. பழனிகுமார்;

புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. நெல்சன்;

ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மா. வரதராஜ்;

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. இரா. சுப்பிரமணியன்;

தென்காசி மாவட்டம், சேந்தமரம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கோ. மாரியப்பன்;

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. ரமேஷ்;

தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ச. சிங்காரவேலன்;

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பா. ராமமூர்த்தி;

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கே. முருகேசன்;

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மா. வீரப்பன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>