×

வீடு தூய்மையானால் நாடு தூய்மையாகும்: கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேச்சு

பங்காருபேட்டை: மக்கள்  ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை தூய்மையாக வைத்து கொண்டால், நாடு தூய்மையாக  இருக்கும் என்று கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரரெட்டி  தெரிவித்தார்.பங்காருபேட்ைட டவுன் முனிசிபாலிட்டி மற்றும் சுவாமி  விவேகானந்தர் இளைஞர் மன்றம் இணைந்து பங்காருபேட்டை பஜார் தெருவில் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்றி தூய்மை செய்யும் பணியில்  ஈடுப்பட்டனர். இதில் தாலுகா சுகாதார அதிகாரி கோவிந்தராஜி, வார்டு கவுன்சிலர் பிரசாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்று தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்து  சந்திராரெட்டி பேசும்போது:  இன்றைய கால கட்டத்தில் தூய்மைக்கு  முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பொதுமக்கள்  அதிகம் கூடும் பகுதியில் குப்பை, கழிவுகள் இருந்தால் பல தொற்று நோய்கள்  பரவும். இதை தவிர்க்க வேண்டுமானால் தூய்மையாக வைக்க வேண்டும். நாம்  ஒவ்வொருவரும் தனது வீட்டையும் வீட்டின் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்தால்,  நமது பகுதி சுத்தமாகும். அதன் மூலம் நகரம் சுத்தமாகும். இதன் பிரதிபலிப்பு  நாடு தூய்மையாகும் என்றார்.

Tags : house ,country ,President ,Congress ,Kolar District , If the house is clean, the country is clean: Kolar District Congress President's speech
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?