×

கோலார் எஸ்.என்.ஆர் அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை

கோலார்: கோலார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன் மைசூரு மாகாணத்தை ஆட்சி நடத்திய கிருஷ்ணராஜ  உடையார் கடந்த 1937ம் ஆண்டு 162 ஏக்கர் நிலபரப்பில் கோலார் நகரில்  மருத்துவமனை உருவாக்கினார். மகப்பேறு உள்பட அனைத்து நோய்களுக்கும்  சிகிச்சை அளிக்கும் வசதிகளுடன் 560 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக  உருவாக்கினார். நாடு சுதந்திரம் பெற்றபோது மாவட்ட தலைமை அரசு பொது  மருத்துவமனையாக மாற்றம் செய்ததுடன் ஸ்ரீநரசிம்மராஜ உடையார் மருத்துவமனை என  பெயர் சூட்டப்பட்டது. இம்மருத்துவமனையில் 19 உட் பிரிவுகள் உள்ளது.  தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகிறார்கள்.  உள்நோயாளிகளாக 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் தரமான அறுவை சிகிச்சை மையம் இருப்பதால், மாதத்திற்கு  குறைந்த பட்சம் 350 அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. தனியார் மருத்துவமனைகளை  காட்டிலும் சிறப்பாக மகப்பேறு சிகிச்சை அளிப்பதால், மாதந்தோறும் குறைந்த  பட்சம் 500 மகப்பேறு நடக்கிறது.

நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள்  சிறப்பாக வழங்கப்படுகிறது. இம்மருத்துவமனையில் இவ்வளவு வசதிகள்  இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. தேசிய பொது மருத்துவமனை சட்டத்தின்  (ஐபிஎச்எஸ்) அடிப்படையில் 500 படுக்கைகள் உள்ள மருத்துவமனையில் 60  டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். எஸ்.என்.ஆர். மருத்துவமனையில் தற்போது  32 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஐபிஎச்எஸ் சட்டத்தின்படி ஒரு டாக்டர்  தினமும் 30 நோயாளிகளை பார்க்க வேண்டும். இங்கு 150 நோயாளிகளை ஒரு டாக்டர்  பார்க்கும் நிலை உள்ளது. டாக்டர்கள் பற்றாகுறையால் வார விடுமுறை எடுக்க  முடியாத நிலை உள்ளது. காலி இடங்களை நிரப்பினால் மேலும் சிறப்பாக சிகிச்சை  அளிக்கப்படும் என்பது நோயாளிகளின் கருத்தாகவுள்ளது.

Tags : Doctors ,Kolar SNR Government General Hospital , Shortage of Doctors at Kolar SNR Government General Hospital
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...