×

பிங்கர் 4 பகுதியிலிருந்து சீன படை விலகல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கல்வான் மற்றும் பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் படைகளை விலக்கிக் கொள்வதென இந்தியா, சீனா இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பாங்காங் ஏரிபகுதி 8 விரல்களை கொண்ட இடமாக அமைந்துள்ளது. எனவே இதற்கு பிங்கர் என பெயரிப்பட்டுள்ளது. இதில் பிங்கர்-8 வரை தங்களுக்கு சொந்தம் என இந்தியாவும், 4 வரை மட்டுமே என சீனாவும் கூறி வருகிறது. இதனால், பிங்கர் 4 பகுதி வரை சீன படைஆக்கிரமித்திருந்தது. தற்போது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், பிங்கர் 4 பகுதியிலிருந்து சீன வீரர்கள் பின்வாங்கி உள்ளனர். அங்கு முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.


Tags : Chinese ,Pinker 4 , Chinese force withdraws from Pinker 4
× RELATED சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வு 1 கிலோ ஐஸ்பர்க் ரூ.430-க்கு விற்பனை