×

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தால் பாஜவுக்கு தான் நஷ்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

1. மத்திய அரசு 6 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்காத நிலையில் தற்போது பிரதமர் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தததில் இருந்து தமிழகம் தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீடு, நீட் தேர்வு போன்ற விஷயங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதில் பெரிய அளவில் பிரச்சாரம், அடிக்கல் நாட்டுவிழா எல்லாம் நடந்தது. ஆனால் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை, நிதியும் ஒதுக்கீடு ெசய்யவில்லை. விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை ரத்து செய்யவில்லை. அந்த கடன் நீண்ட கால கடனாக இன்னும் உள்ளது. இப்படி எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு இன்றைக்கு பல திட்டங்களை தொடங்கி வைக்க வருகிறார். இந்த திட்டம் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இது எப்படி இருக்கிறது என்றால் யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது தேர்தலையொட்டி செய்யப்படக்கூடிய காரியம் ஆகும்.

2. எம்.பி தேர்தலில் தமிழகத்தில் மோடியின் பிரசாரம் எடுபடாத நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என்றால் அந்த கட்சியை தேற்கடிக்க பிரசாரம் பண்ணுகிறார் என்று அர்த்தம். அவர் பிரசாரத்திற்கு வரவில்லை என்றால் தான் எதிர்க்கட்சிகளுக்கு நஷ்டம். அவர் பிரசாரம் பண்ணினார் என்றால் எதிர்க்கட்சிகளுக்கு லாபம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அப்படி தான் முடிந்தது.

3. பரபரப்பாக வெளியில் வந்த சசிகலா தற்போது எந்தவிதமான செயல்களில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறார். அவரை ஓபிஎஸ், இபிஎஸ் தூக்கி வீசிவிட்டார்களா?

பரபரப்பு செயற்கையாக உண்டு பண்ணியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அழைத்து வரப்பட்டு இந்தெந்த இடங்களில் நிற்க வேண்டும் என்று கூறி நீண்ட பயணமாக வந்தனர். அதாவது எம்ஜிஆர் சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் போகும்போது அப்பகுதியில் உள்ள  மக்கள் அங்கங்கே உள்ள ரயில் நிலையங்களில் நின்று அவருக்கு  மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனால் காலதாமதாக சென்றடைந்தார். அதுபோன்று கருத்தை உருவாக்குவதற்கு பெரிய புரட்சி பண்ணுகிறார்கள். அது செயற்கை என்பது அன்றைக்கே அம்பலமாகி போய்விட்டது. அதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்படாது.

4. சட்டசபை தேர்தலில் அதிமுகவை மிரட்டி பாஜ அதிக தொகுதிகளை கேட்கிறாதா? அப்படி அதிக தொகுதிகளை பெரும்பட்சத்தில் அவர்களின் வெற்றி எப்படி உள்ளது?

ஒரு கட்சியில் யார் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று அந்தெந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு நிலை அப்படியில்லை. தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மிகப்பெரிய கட்சி என்று கூறுகின்றனர். அது உண்மை தான் ஆனால் அந்த கட்சிக்கு யார் பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று தீர்மானிக்கும் சக்தி பாஜகவிற்கு போய்விட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்க கூடிய கட்டாயத்திற்கு, நிர்ப்பந்தத்துக்கு இந்த கட்சி ஆளாகிவிட்டது. கட்சியே இப்படி ஆன போனது ஆட்சி எப்படி சொந்தமாக நடத்த முடியும். அதனால் தான் மத்திய ஆட்சிக்கு அடிமை ஆட்சியாக உள்ளது அகற்றப்பட வேண்டும். அதனால் தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டியதுள்ளது. அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க கூடிய நிலையில் தான் உள்ளனர். அந்த அளவிற்கு பலவீனமாக உள்ளனர். அதை பயன்படுத்தி அதிக இடங்களை ெபற முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் பாஜ எந்த அளவுக்கு அதிக இடங்களில் போட்டியிடுகிறதோ அது எதிர்க்கட்சிக்கு நல்லது.

Tags : BJP ,campaigns ,Modi ,Tamil Nadu Assembly ,Secretary of State ,Muttahida Qaumi Movement ,Communist Party of India , Tamil Nadu Legislative Assembly, General Election, Communist Party of India, Mutharasan
× RELATED முஸ்லிம்களுக்கு பாஜ ஆட்சியில் சலுகை: பிரதமர் மோடி பிரசாரம்