×

பரவல் குறைந்தாலும் கவனம் தேவை...! தமிழகத்தில் மேலும் 455 பேருக்கு கொரோனா: புதிதாக 6 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,45,575 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,45,575 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 477 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,28,918 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,419 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 143 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,33,482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,68,13,020 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,352 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 4,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,10,984 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 250 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,34,556 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 205 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 254 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 186.

Tags : spread ,deaths ,Corona ,Health Department ,Tamil Nadu , Attention is needed even if the spread is low ...! Corona for 455 more in Tamil Nadu: 6 new deaths: Health Department report
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...