×

நீர் மேலாண்மைக்காக விருது கிடைத்ததில் பெருமை: மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம்: முதல்வர் பழனிசாமி பேச்சு..!!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட நீடிப்பு திட்டத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கடந்த மாதம் 18ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது  தமிழகத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இங்கு வந்தமைக்கு எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரதமர் மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக உலக நாடுகளிடம் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த தொற்றினை முற்றிலும் வேரறுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் திட்டம் தற்போது சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. மேலும், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் பாராட்டுக்குரியது.

அதிமுக அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக 18,300 கோடி ரூபாய் செலவில் 45.1 கிலோமீட்டர் நீளத்தில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலைய வழித்தடம், பரங்கிமலை வரை சீரமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதி அளித்து வருகிறது. தமிழகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  சென்னையில் 45 கி.மீ. தூரத்துக்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நீர் மேலாண்மைக்கான சிறந்த விருது தமிழகத்திற்கு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

Tags : rail project ,Palanisamy ,Madurai ,Metro ,Coimbatore , Madurai, Coimbatore, Metro Rail, Project, Chief Minister Palanisamy, Speech
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில்...