×

இந்தியா அணியின் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது: 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்..!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்ந்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து,  இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 96வது ஓவரில் குல்தீப் யாதவ் (0), முகமது சிராஜ் (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் பிறகு, ஆட தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரிலே ரோரி பார்ன்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது. கேப்டன் ஜோரூட் 6 ரன்களில் அவுட் ஆனார். தற்போது, இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Tags : India ,innings ,England , India, Test match, England, stumble
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!