×

இனி காகித பாட்டில்களில் குளிர்பானம்... ஹங்கேரியில் பேப்பர் பாட்டிலில் வருகிறது கோகோ கோலா

ஹங்கேரி : உலக புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான கோகோ கோலா முற்றிலும் காகிதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாட்டில்களை சோதனை முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோகோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. வாயு நிறைந்த பானங்களை முற்றிலும் காகிதத்தை பயன்படுத்தி தயாரிக்கும் குடுவையில் அடைப்பதும் விநியோகிப்பதும் சவால் நிறைந்த பணி என்பதால் இது குறித்த ஆராய்ச்சிகள் தோல்விலேயே முடிவடைந்தன.

இந்த நிலையில், டென்மார்க்கை சேர்ந்த பபோகோ என்ற நிறுவனம் 7 வருட ஆய்வக பரிசோதனைகளுக்கு பிறகு, குளிர்பானங்களை அடிப்பதற்கான பேப்பர் பாட்டில் தயாரிப்பில் வெற்றி அடைந்துள்ளது. அடிப்படை சோதனைகள் திருப்தி அடைந்துள்ள நிலையில், முதற்கட்டமாக அடேஸ் என தனது பழரச குளிர்பானத்தை காகித பாட்டில்களில் அடைத்து ஹங்கேரியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது கோகோ கோலா நிறுவனம். சோதனை முயற்சியாக முதற்கட்டமாக 2,000 காகித பாட்டில்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி கிடைத்தால் உலகம் முழுவதிலும் தமது குளிர்பான தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை மட்டுமே பயன்படுத்த கோகோ கோலா திட்டமிட்டுள்ளது.


Tags : Coca Cola ,Hungary , கோகோ கோலா
× RELATED கள்வன் படத்துக்கு ஹங்கேரியில் பின்னணி இசை