×
Saravana Stores

இரவு, பகலாக அரங்கேறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அடுத்த மதனப்பள்ளி மலட்டாற்றில் இரவு, பகல், பாராமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேரணாம்பட்டு அடுத்த மதனப்பள்ளி மலட்டாற்றில் கடந்த சில மாதங்களாக மணல் கொள்ளையர்கள் மணலை எடுத்து பகலில் ஜலித்து வைத்துவிட்டு இரவில் ஜேசிபி கொண்டு டிராக்டர்களில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து, மணல் கடத்தப்பட்டு வருவதால் ஆறு முழுவதும் பெரிய, பெரிய குழிகளாக காட்சியளிக்கிறது. மேலும், ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் ேவதனை தெரிவித்தனர்.

மேலும், மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், எவ்வித அச்சமுமின்றி இரவு, பகலாக மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேரணாம்பட்டை சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் பேரணாம்பட்டு தாசில்தார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கலெக்டர் இதில் தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Groundwater level
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!