×

நெம்மாராவில் வரையாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்துள்ள நெல்லியாம்பதி காட்டுப்பகுதிகளில் வரையாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், மான், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதுதவிர, தற்போது வரையாடுகளும் போத்துண்டி - நெல்லியாம்பதி மலை சாலையோரங்களில் அதிகமாக சுற்றித்திரிகின்றன.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. அவர்கள் வரையாடுகளை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். வரையாடுகள் அதிகளவில் இடுக்கி மாவட்டம் மறையூர், கல்லாறு, மூணாறு, இடுக்கி ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

ஆனால், தற்போது நெல்லியாம்பதி காட்டுப்பகுதிகளில் கோவிந்தமலை, சீதாரம்குன்று, போத்துண்டி - நெ்லலியாம்பதி சாலை, மங்கலம் அணை, அடிப்பெரண்டா, அயிலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.  இவை வனத்துறையினர் கண்காணிக்க வைத்துள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. வனத்துறையினர் பதிவு செய்துள்ள வரையாடுகளின் படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Tags : nomads ,Nemmara , The wild goats
× RELATED 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம் படமாகிறது