×

அரசின் உதவி பெற '1100'சேவை எண், பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது விவசாயிகளுக்கு விநியோகம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு : முதல்வர் பழனிசாமி சரவெடி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண் டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன் றாம்கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் நான்காம்கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நடந்த ஐந்தாம்கட்ட அகழாய்வில் 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஆறாம்கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் பிப்.19 தொடங்கி செப்.30 வரை நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.சமீபத்தில் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 7-ம் கட்ட அகழாய் வுப் பணிகளை இன்று காணொலி் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்க உள்ளன.

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது விவசாயிகளுக்கு விநியோகம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் விதமாக ரூ.12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது 16.34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

1100 சேவை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 எண் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.  1100ஐ தொடர்பு கொண்டு அளிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : Palanisamy Saravedi , முதல்வர் பழனிசாமி
× RELATED பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி...