பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவு

டெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியேறினர். இந்தியாவின் அண்டை நாடான தஜிகிஸ்தானில் இரவு 10.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.3ஆக பதிவானது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களிலும் உணரப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியேறினர். பஞ்சாபி மாநிலம் ஜலந்தரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீரில் தோடா, ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளிலும் அரியானா, டெல்லி, நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆட்டம் கண்டதை கண்கூடாக காணமுடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

வடமாநிலங்களில் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மக்கள் விடியவிடிய உறக்கமின்றி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

Related Stories: