×

பதிலடி கொடுக்குமா இந்தியா? 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்

சென்னை: இந்தியா-இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் சென்னையில் இன்று தொடங்குகிறது. ஆஸி. தொடரில் எழுச்சி கண்ட இந்தியா சொந்த மண்ணில் தோற்றது  பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர சில மாற்றங்களுடன்  இன்று களம் காண்கிறது.  நதீமுக்கு பதிலாக அக்சர் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் தரப்படலாம். ஐசிசி உலக கோப்பை  டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தொடர் வெற்றிகள் முக்கியம்.

அதனால் இந்தியா வெற்றிக்காக அதிக முனைப்பு காட்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உள்ளூர் ரசிகர்கள் முன்பாக விளையாடுவது இந்திய  வீரர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும். இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பட்லர் 2 வார ஓய்வில் நாடு திரும்பியுள்ளதால், அவருக்கு பதிலாக பென் போக்ஸ், காயத்தால் அவதிப்படும் ஆர்ச்சருக்கு பதிலாக  ஸ்டூவர்ட் பிராடு  சேர்க்கப்பட்டுள்ளனர். பதிலடி கொடுக்க இந்தியாவும், முன்னிலையை அதிகரிக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், அகர்வால்,  கில்,  ரகானே,  புஜாரா, ஹர்திக், அஷ்வின்,வாஷிங்டன்,  அக்சர், கேஎல் ராகுல், பன்ட், சாகா, இஷாந்த், பும்ரா,  குல்தீப், சிராஜ், தாகூர்.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), லாரன்ஸ், சிப்லி, மொயீன் அலி, ஸ்டோக்ஸ், வோக்ஸ், பர்ன்ஸ், போக்ஸ், ஓல்லி போப், ஸ்டூவர்ட் பிராடு, ஜாக் லீச், ஓல்லி ஸ்டோன்.

Tags : India , Will India retaliate? The 2nd Test starts today
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...