மின்வாரியம் அறிவிப்பு: உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் கணக்கு பதவிக்கு தேர்வு

சென்னை: உதவி பொறியாளர், மின்னியல், உதவி பொறியாளர், இயந்திரவியல், உதவி பொறியாளர், கட்டடவியல், இளநிலை உதவியாளர், கணக்கு பதவிக்கு கணினிவழி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு 15ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட  உதவி பொறியாளர், மின்னியல் (400), உதவி பொறியாளர், இயந்திரவியல் (125), உதவி பொறியாளர், கட்டடவியல் (75) ஆகிய பதவிகளுக்கு ஏப்ரல் 24, 25ம் தேதி மற்றும் மே 1, 2ம் தேதி ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட  500 இளநிலை உதவியாளர், கணக்கு பதவிக்கு மே 8, 9ம் தேதி மற்றும் 15, 16ம் தேதி ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்  www.tangedco.gov.in என்ற இணையத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும்  பார்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories:

>