×

காணாமல் போன கணியம்பாடி தொகுதி

பழைய வடாற்காடு மாவட்டத்தில் குறிப்பிடும்படியான தொகுதியாக கடந்த 1967ம் ஆண்டு கணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது சட்டமன்ற தொகுதிகளாக இருந்த விரிஞ்சிபுரம் மற்றும் ஆம்பூர் பகுதிகளை பிரித்தும், போளூர் சட்டமன்ற தொகுதியில் இருந்த சில பகுதிகளை சேர்த்தும் கணியம்பாடி தொகுதி உருவானது. அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எல்.பலராமனும், 71ல் தி.மு.க சார்பில் தோப்பூர் திருவேங்கடமும் வெற்றிபெற்றுள்ளனர். தொடர்ந்து 1977ம் ஆண்டு கணியம்பாடி தொகுதி கலைக்கப்பட்டு அணைக்கட்டு தொகுதி உருவானது.



Tags : Ganyambadi , Missing Ganyambadi block
× RELATED சோழவரம் ரேஷன் கடையில் அணைக்கட்டு...