×

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு பயிர்க்கடன் ரத்து ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கடந்த பிப்.5ம் தேதி 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். 2021 ஜனவரி 31ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தினத்தில் பயிர்க்கடன்களுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதில் வேளாண்மை நகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, சட்ட விசாரணை, விதிமுறைகேடு உள்ள கடன்களுக்கு இது பொருந்தாது.போலி ஆவணம் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள், பினாமி கடன்கள் ரத்து செய்யப்படாது. பயிர் செய்ய வாங்கிய நகைக் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். வேளாண்மை சாரத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது. தகுதியுள்ள பயிர்களுக்கான கடன், அசல், வட்டி விவசாயிகளிடம் இருந்து வசூலிக்க கூடாது.

ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நிலுவையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன் பெறலாம். கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் எண், கடன் தொகை விவரத்தை தனித்தனியாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதே போல் நிலுவையின்மை சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் விவசாயிகள் கடன் பெற அளித்த அசல் நிலப்பதிவேடு ஆவணம் மற்றும் நகைகள் உடனே திருப்பி வழங்க வேண்டும். இது குறித்த விவரங்களை கூட்டுறவு சங்கத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.  பயிர்க்கடன் ரத்து ரசீது விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.


Tags : Issuance of Guidelines and Receipt of Crop Cancellation will be issued to the farmers
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...