×

தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி இல்லை: கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம் என்கிறது சத்தீஸ்கர் அரசு

டெல்லி: உள்நாட்டிலேயே தயாரான கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப வேண்டாம் என்ற சத்தீஸ்கர் மாநில அரசின் வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடியாததால் அதன் செயல்திறன் இன்னும் உறுதியாகவில்லை என்பது சத்தீஸ்கர் மாநில அரசின் நிலைப்பாடு.

அத்துடன் கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் சத்தீஸ்கர் அரசும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்து சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்டீஸ்கர் மாநில அரசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதில் சத்தீஸ்கர் அரசு மிகவும் பின்தங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷ வர்தன் சாடியுள்ளார்.

Tags : government ,Chhattisgarh , Kovacin vaccine
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...