×

புது வெள்ளைமழை... இங்கு பொழிகின்றது பனியில் நனையும் ‘இளவரசி’

* பச்சை மைதானங்களில் பனிப்போர்வை
* சுற்றுலாப்பயணிகள், மக்கள் திண்டாட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஐந்து டிகிரி செல்ஷியசிற்கும் கீழ் சென்ற தட்ப வெப்பநிலையால், உறைபனி அதிகம் படர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குளிர்காலம் என்பது டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே இருக்கும். இக்காலங்களில் உறைபனி கொட்டுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் பெய்த தொடர்மழை காரணமாக பனியின் தாக்கம் தாமதமாக தற்போது நீடித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக உறைபனி கொட்டுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. கொடைக்கானல் கீழ்பூமி பகுதிகளில் உள்ள பசுமை போர்த்திய புல்வெளிகளில் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் இருந்த நிலையில் நேற்று அதிகாலையில் 5 டிகிரி செல்ஷியசிற்கும் கீழ் தட்ப வெப்பநிலை சென்றதால், கடுமையான உறைபனி கொட்டியது. இது கொடைக்கானலில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அதிகாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமமடைகின்றனர்.இனிவரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவினாலும் கூட, உறைபனி தொடர்ந்து இருக்கும். தட்ப வெப்பநிலை இன்னும் கூட குறையலாம் என்று வானியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதிகாலை நேரம் கொட்டிய உறைபனியால் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

Tags : Fresh white rain ... it's raining snow 'Princess'
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு