×

கிழக்கு மாநகராட்சியில் செல்போன் செயலி மூலம் வருகை பதிவு அறிமுகம்

புதுடெல்லி: செல்போன் செயலி அடிப்படையில் வருகை பதிவை குறிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஜ தலைமையிலான கிழக்கு டெல்லி மாநகராட்சியில், கடந்த டிசம்பரில் கூடுதல் கமிஷனர் அல்கா ஆர் ஷர்மா எம்சிடி வரவு  செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து இருந்தார். அதில் சொத்து வரியில் 5 சதவீதத்தை கல்வித் தொகைக்கு ஒதுக்க முன்மொழியப்பட்டது. இந்நிலையில், ஆண்டு பட்ஜெட் குறித்து சபையின் தலைவர் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றுது. அப்போது, வருவாயை அதிகரிக்க ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட தொழில்முறை வரி மற்றும் மேம்பாட்டு வரி உள்ளிட்ட மூன்று  புதிய வரிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், செல்போன் செயலி அடிப்படையில் வருகை பதிவை குறிக்கும்  நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கிழக்கு டெல்லி மாநகராட்சி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களின் இருப்பிடத்தை லைவ் ஆக தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும் என எம்சிடி தெரிவித்துள்ளது.

Tags : Introduction ,Eastern Corporation , Introduction of attendance registration through cell phone processor in Eastern Corporation
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...