×

பிரதமர் சுயஉதவி திட்ட கடனுதவியில் மாநிலம் முதல் இடத்துக்கு வரவேண்டும்: முதல்வர் எடியூரப்பா ஆலோசனை

பெங்களூரு: பிரதமர் சுயஉதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வர உழைக்க வேண்டும்  என முதல்வர் எடியூரப்பா ஆலோசனை வழங்கினார். பெங்களூரு, விதான சவுதாவில் பிரதமர் சுய உதவி கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வங்கி கடன்கள், பிரதமர் வீட்டு வசதி கடன்கள், பெங்களூரு வீட்டு வசதி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் கனரா வங்கி செயல் இயக்குநர் மணிமேகலை, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் ஜோஸ் உள்ளிட்ட பல்வேறு வங்கி அதிகாரிகள், தலைமை செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற அதிகாரிகள் தேசிய வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்ட கடன் தொகை விபரங்களை முதல்வரிடம் எடுத்துரைத்தனர். அப்போது தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை மிகவும் குறைவாக இருப்பதை அறிந்த முதல்வர் எடியூரப்பா வங்கி அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி அடைந்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: ``பிரதமர் சுயநிதி உதவி கடன் திட்டங்களுக்கு வங்கி அதிகாரிகள் கடன் வழங்குவதில் மெத்தனமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது.  

தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு ரூ.10ஆயிரம் வரை எவ்வித பிணையும் இன்றி கடன் வழங்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. கடனுக்கான விண்ணப்பம் செய்த நபர்களுக்கு கடன் வழங்கப்படாமல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமான அதிகாரிகள் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறேன். பிரதமர் சுயஉதவி கடனிற்கான விண்ணப்பங்களை அரசுக்கு எதிராக சாதி அமைப்புகள் நடத்திய மாநாட்டில் முதல்வர் எடியூரப்பா உள்பட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளது பாஜ தலைமையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

ஆளும் கட்சிக்கு எதிராக நடக்கும் மாநாடு, பாதயாத்திரைகளில் முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்வது என்ன நியாயம்? அவர்கள் கலந்து கொள்ள யார் அனுமதி வழங்கியது என்ற கேள்வியை தேசிய பாஜ தலைவர்கள் எழுப்பியுள்ளனர். இட ஒதுக்கீடு கோரிக்கை இருந்தால், சம்மந்தப்பட்ட மடங்களின் மடாதிபதிகளை அழைத்து மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். அதை விட்டு மாநாட்டில் எப்படி கலந்துகொள்ளலாம். சாதி அமைப்புகள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடத்தும் பெரிய பெரிய மாநாடுகள் நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது.

அந்த மாநாடுகளில் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது யார் ? இதை தடுக்காமல் விட்டது ஏன்? என்று கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் வால்மீகி சங்கம் நடத்திய மாநாட்டில் பங்கேற்றதும், அம்மாநாட்டில் மடாதிபதி பிரசனானநந்தபுரி சுவாமியுடன் மேடையில் வாக்கு வாதம் நடத்தியது சரியா? என்று முதல்வர் எடியூரப்பாவுக்கு கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. கர்நாடகாவில் மக்கள் பலம் அதிகமுள்ள சாதியினர் நடத்தும் மாநாட்டில் முதல்வர் உள்பட அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மக்கள் பலமில்லாத சிறிய சாதி அமைப்புகளும் இதே இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தால் என்ன செய்வீர்கள்? இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாதா? இதை ஏன் முதல்வர் உள்பட அமைச்சர்கள் யோசிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜ தலைமை, எந்தெந்த சாதி வகுப்பினர் எவ்வளவு இட ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு வகுப்பினரும் எத்தனை சதவீதம் உள்ளனர் என்ற விவரங்களை வரும் 20ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளது. விண்ணப்பத்தில் அது சரியில்லை இது சரியில்லை என்று காரணம் கூறவேண்டாம். ஆதார் கார்டை அடிப்படையாக வைத்து கடன்  வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tags : State ,Eduyurappa , State should come first in PM self-help scheme loans: Chief Minister Eduyurappa advises
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...