×

திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீ சன்வலியா சேத் கோயில்: முதல் நாளில் 91 கிராம் தங்கம்; 4 கிலோ வெள்ளி; ரூ.6.17 கோடி காணிக்கை.!!!

சித்தோர்கர்: உண்டியல் பணம் ஏன்றாலே அனைவரும் நியாபகம் வருவது திருப்பதி கோயில்தான். ஆனால் தற்போது, அந்த நிலை மாறியபோதா தெரிகிறது. ஏன்னென்றால், ராஜஸ்தான் கோயிலில் பணம் எண்ணும் பணியை அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுதான். கோயில்களுக்கு செல்லும் அனைவருமே தெய்வ நம்பிக்கையில் கோயில் உண்டியல்களில் பணத்தை கணக்கில்லாமல் பக்தர்கள் செலுத்துவது வழக்கம். இதனைபோல், நாடு முழுவதிலும் பணத்தை வாரிக் கொடுக்கும் கோவில்களில் ஒன்றாக ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சன்வலியா சேத் கோயில் உள்ளது.

ஸ்ரீ சன்வாலிய சேத் கோயிலில் மாதம் முழுவதும் உண்டியலில் வசூல் ஆகும் பணத்தை அமாவாசைக்கு முந்தைய தினத்தில் எண்ணுவது வழக்கமாக உள்ளது. இதன் அடிப்படையில் நேற்றைய தினம் கோவில் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் பணியை கோவில் ஊழியர்கள் தொடங்கினர். இருப்பினும், உண்டியலில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் அதனை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் சோர்வடைந்தனர். ஒரு நாளில் பணத்தை அவர்களால் எண்ண முடியாமல் போகவே இன்றும் உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சத்து 12 இருநூறு ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. இது தவிர 91 கிராம் தங்கமும், 4 கிலோ 200 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்துள்ளது. இன்றும் உண்டியல் பணம் எண்ணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான பணம் இம்முறை உண்டியல் வசூல் மூலம் இக்கோவிலுக்கு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. பணம் எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் ரத்தன் குமார் சுவாமி, அறநிலையத்துறை தலைவர் கன்ஹைய தாஸ் வைஷ்னவ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இந்நிலையில், ஸ்ரீ சன்வாலிய சேத் கோயில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


Tags : Seth Temple ,Sri Sanwalia ,Duff ,Tirupati , El templo Sri Sanwaliya Seth le da Duff a Tirupati: 91 gramos de oro el primer día; 4 kg de plata; Donación de Rs 6.17 crore !!!
× RELATED டாஸ்மாக் வருமானத்திற்கு டஃப்...