×

டாஸ்மாக் வருமானத்திற்கு டஃப் கொடுக்கும் அபராதம்; ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் ரூ.7,27,600 வசூல்...தமிழக காவல்துறை தகவல்

சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. நேற்று வரை 2-ம்  இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில், 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மேலும், ஊரடங்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள்  மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பதா? அல்லது புதிய செயல்  திட்டத்தை அமல்படுத்துவதா? என்பது குறித்து மத்திய அரசு இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.  பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 11,279 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,75,636 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஊரடங்கை மீறியதாக 163477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,957 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 1,39,008 பறிமுதல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.68,57,344  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 9,303 வாகனங்களும், ரூ.7,27,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Duff , Duff pays for tax revenue; Rs. 7,27,600 in the last 24 hour
× RELATED இனி ஈஸியாக ஓட்டுநர் உரிமம் பெற...