×

ஒர்க் ஃப்ரம் ஹோமா சார்?

கொரோனா காலத்தில் பல பணிகள் வீட்டிலிருந்தே செய்ய வேண்டியதாய் மாறிவிட்டன. ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற புதிய நடைமுறைக்கு உலகம் வேகமாக மாறியதும் கடந்த ஆண்டுதான். இந்நிலையில் இப்படி நீண்டகாலமாக வீட்டிலிருந்தே பணி செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி ஓர் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டிலிருந்து வேலை செய்பவர்களில் இருபத்தொரு சதவீதம் பேர், அலுவலகச் சூழலும் பாராட்டும் ஊக்கமும் இல்லாமல் பணியாற்றுவது சிரமமாய் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். இமெயில் போன்ற தொடர்பு சாதனங்களைக் கையாள்வது சிரமமாய் இருக்கிறதென 39% சதவீதம் பேரும், கார்ப்பரேட்களின் கோப்பு நடைமுறைகளை ஆன்லைனின் பின்பற்றுவது கடினமாய உள்ளதென 37% பேரும் தெரிவித்திருக்கிறார்கள். மூன்றில் ஒருவர் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான போதுமான சாதனங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.



Tags : Homa , ஒர்க் ஃப்ரம் ஹோம்
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா