×

கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்படுவதாக கூறுவது தவறு: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

நாகை : சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.நாகூரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்படுவதாக கூறுவது தவறு. அந்தந்த மொழிகளை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர். மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சாட்டுவது தவறு. மத்திய அரசு நிறுவனங்களில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

மத்திய அரசு நிறுவனங்களில் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெறுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் நடவடிக்கை எடுப்பார்.சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. இது நீதிமன்ற நடவடிக்கை ஆகும். சசிகலா வருகையை முன்னிட்டு எந்த அதிமுகவினரும் கட்சி கட்டுப்பாடுகளை மீறி நடக்கவில்லை. அமமுகவினர் எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி தேர்தலை சந்தித்து உள்ளனர். அவர்கள் சக்தி என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

Tags : Central Government ,schools ,Maniyan ,Kendra Vidyalaya , அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...