×

ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய 2 வாலிபர்கள் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை: குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்'

ஈரோடு: ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய 2 வாலிபர்கள் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு  கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குணா என்ற  குணசேகரன் (29). ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த கலை  என்ற கலைச்செல்வன் (31). இவர்கள் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு  கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரமேஷ் என்ற பிரகலாதன் என்பவரை வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக குணசேகரனும், கலைச்செல்வனும் நேற்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இவர்களுடன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய  11 பேரும் ஆஜராகியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த குணசேகரனையும், கலைச்செல்வனையும் ஈரோடு வீரப்பன்சத்திரம்  தெப்பக்குளம் அடுத்த பெரியகுட்டை வீதிக்கு மர்ம  கும்பல் வரவழைத்தது. அங்கு அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் குணசேகரனையும், கலைச்செல்வனையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முகம், இடுப்பு,  நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர்.

குணசேகரன் அங்கு  இருந்த சாக்கடையில் குதித்து தப்பி ஓட முயன்றபோது மயங்கி விழுந்தார்.  சாக்கடையில் விழுந்த அவர் மீது அந்த கும்பல் கல்லை போட்டு கொலை செய்தனர். கலைச்செல்வனும் தப்பி  சென்றபோது, ஒரு இடத்தில் தவறி கீழே விழுந்தார். விரட்டி சென்ற கும்பல்  கலைச்செல்வனையும் சரமாரியாக வெட்டி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில்  உள்ள ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கொலை  நடந்த இடத்தில் ஒரு அரிவாளை மீட்டனர். கொலை கும்பலுடன் இருந்ததாக ஒரு  வாலிபரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த இரட்டை  கொலை சம்பவம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்ததால்,  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : youths ,court ,Erode ,area ,terror attack , Erode, 2 youths, murder
× RELATED மதுரையில் வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது