×

பெட்ரோல் விலை அதிகரிப்பால் உயர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு: போக்குவரத்து துறை தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் கிழக்கு பகுதியில் அதிகப்படியான எலக்ட்ரானிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை பதிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.  டெல்லியை போல் பெங்களூருவிலும் காற்றுமாசு அதிகரிக்க தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அதிக வாகனங்கள் இயங்காததால் காற்றுமாசு கட்டுக்கள் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் காற்று மாசு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து தற்போது எலக்ட்ரானிக் வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனையும் படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி பெங்களூரு கிழக்கில் சுமார் 4882 எலக்ட்ரானிக் வாகனங்கள் பாதிவு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறையின் பதிவுகள் தெரிவிக்கிறது.  அதன்படி, எலக்ட்ரானிக் சிட்டியில் 3812 வாகனங்களும், கோரமங்களாவில் பெங்களூரு சென்ட்ரலில் 1869, கேஆர் புரத்தில் 1213, பெங்களூரு மேற்கு ராஜாஜி நகரில் 1060, வடக்கில், யஷ்வந்த் பூரில் 966, ஞானபாரதியில் 297, எலகங்காவில் 267, மற்றும் சந்தபுராவில் மிக குறைவான 214 வாகனங்களும் பாதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மஹிந்திரா எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக் மற்றும் போஷ் போன்ற நிறுவனங்கள் உள்ளது. ஆனால் போக்குவரத்து துறை தகவல்கள் படி நகரத்தில் இதுவரை 15 ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயிலும் 2030-ம் ஆண்டுக்குள் சுற்றுசூழலை பாதுகாக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கு அதிக நாட்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எலக்ட்ரானிக் வாகனங்களின் விலை அதிகளவில் இருப்பதால் அதனை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டால் அதிகபடியான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள் என கோரிக்கை விடுத்தனர்.

126 இடங்களில் சார்ஜிங் மையம்
போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 26,209 எலக்ட்ரானிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 19,062 இரு சக்கர வாகனங்கள் 678 ஆட்டோக்கள் மற்றும் 6,469 கார்கள் பதிவாகியுள்ளன. 2021-ம் ஆண்டு நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 2.5 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட நகரில் சுமார் 126 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைத்துள்ளது. இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவித்தனர்.

Tags : Department of Transport Information , Registration of electric vehicles rising due to petrol price hike: Department of Transport Information
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...