×

செங்கோட்டை வன்முறை வழக்கு பேஸ்புக்கில் ‘லைவ்’ செய்த குற்றவாளி கைது

புதுடெல்லி:வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி குடியரசு தினத்தன்று டெல்லி ெசங்கோட்டையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜந்த் சிங்  ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த இவர்களை கண்டுபிடித்து தந்தால் ரூ .1 லட்சம் ரொக்க வெகுமதி தருவதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், டெல்லி வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நடிகர் தீப் சித்துவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும், டெல்லி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமறைவாக உள்ள ஜஸ்பீர் சிங், பூட்டா சிங்,  சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் தருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று அதிகாலை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீசார், தலைமைவாக இருந்த இக்பால் சிங்கை அதிரடியாக கைது செய்தனர். இவர், பேஸ்புக் மூலம் வன்முறை சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்து மக்களைத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘செங்கோட்டைக்குள் கும்பலைத் தூண்டிவிட்டு லாகூர் நுழைவாயிலை இக்பால் சிங் அடித்து நொறுக்க முயன்றார். விசாரணையின் பின்னர் இக்பால் சிங் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 8 பேரைக் கைது செய்ததற்காக ஏற்கனவே வெகுமதி அறிவிக்கப்பட்டது’ என்றனர்.



Tags : Red Fort ,Convict , கைது
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...