×

உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தடைசெய்த குட்காவை பேரவைக்கு எடுத்து சென்றதற்காக ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. உரிமை குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தது. தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. உரிமைக்குழு கூடி 2வது முறையாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உட்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார். இடைக்காலத் தடையை நீக்கக் கோரி பேரவை செயலர், உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

Tags : Infringement Notice
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...